மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே;
வானோர் வணங்கப்படுவார் தாமே;
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
“சரண்” என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே;
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.