திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே; மயானத்தில்
ஆடல் மகிழ்ந்தார் தாமே;
ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும், அம்பலமும்,
கோயிலாக் கொண்டார் தாமே;
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி