ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவு இல்
பெருமை உடையார் தாமே;
பூ உற்ற நாற்றம் ஆய் நின்றார் தாமே; புனிதப்
பொருள் ஆகி நின்றார் தாமே;
பா உற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.