தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே;
தூ நீறு அணியும் சுவண்டர் தாமே;
தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு
ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே;
பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை
பதியா உடையார் தாமே;
திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.