திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

விளைக்கின்ற நீர் ஆகி, வித்தும் ஆகி,
விண்ணோடு மண் ஆகி, விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளை ஆகி, சோதி ஆகி,
தூண்ட(அ)ரிய சுடர் ஆகி, துளக்கு இல் வான் மேல்
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு
ஒலி நீர்க்கங்கையொடு மூவாது என்றும்
திளைக்கின்ற சடையானை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே."

பொருள்

குரலிசை
காணொளி