திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பிறப்பானை, பிறவாத பெருமையானை, பெரியானை,
அரியானை, பெண் ஆண் ஆய
நிறத்தானை, நின் மலனை, நினையாதாரை
நினையானை, நினைவோரை நினைவோன் தன்னை,
அறத்தானை, அறவோனை, ஐயன் தன்னை,
அண்ணல் தனை, நண்ண(அ)ரிய அமரர் ஏத்தும்
திறத்தானை, திகழ் ஒளியை, திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை, சென்று அடைந்தேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி