திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நீறு ஆகி, நீறு உமிழும் நெருப்பும் ஆகி, நினைவு
ஆகி, நினைவு இனிய மலையான் மங்கை
கூறு ஆகி, கூற்று ஆகி, கோளும் ஆகி, குணம்
ஆகி, குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம்
பொறுத்து அருளி, அவர்மேல் என்றும்
சீறாத பெருமானை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி