திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்;
வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா
நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை
தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள்
புரம்மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி