முற்றாத முழுமுதலை; முளையை; மொட்டை;
முழுமலரின் மூர்த்தியை; முனியாது என்றும்
பற்று ஆகிப் பல் உயிர்க்கும் பரிவோன் தன்னை;
பராபரனை; பரஞ்சுடரை; பரிவோர் நெஞ்சில்
உற்றானை; உயர் கருப்புச் சிலையோன் நீறு ஆய்
ஒள் அழல்வாய் வேவ உறும் நோக்கத்தானை;
செற்றானை, திரிபுரங்கள்; திரு மாற்பேற்று எம்
செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.