அண்டவர்கள் கடல் கடைய, அதனுள்-தோன்றி,
அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்திசையும் சுடுகின்ற ஆற்றைக் கண்டு, இமைப்பு
அளவில் உண்டு இருண்ட கண்டர்; தொண்டர்
வண்டு படு மதுமலர்கள் தூவி நின்று, வானவர்கள்
தானவர்கள் வணங்கி, ஏத்தும்
பண்டரங்க வேடனை; எம் பாசூர் மேய
பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.