வேந்தன், நெடு முடி உடைய அரக்கர் கோமான்,
மெல்லியலாள் உமை வெருவ, விரைந்திட்டு, ஓடி,
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளால் எடுத்திடலும், தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து,
அவன் தன் இசை கேட்டு, இரக்கம் கொண்ட,
பாந்தள் அணி சடைமுடி, எம் பாசூர் மேய,
பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.