திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

படை ஆர் வெண் மழுவா! பகலோன் பல் உகுத்தவனே!
விடை ஆர் வேதியனே! விளங்கும் குழைக் காது உடையாய்!
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன்! எம் காளத்தியாய்!
உடையாய்! உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே .

பொருள்

குரலிசை
காணொளி