பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்; செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே! மெய்யவனே! திருவே! விளங்கும் திருக்காளத்தி என் ஐய! நுன் தன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .