திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

இடை அறியேன்; தலை அறியேன்; “எம்பெருமான், சரணம்!” என்பேன்;
“நடை உடையன், நம் அடியான்; என்று அவற்றைப் பாராதே,
விடை உடையான், விடநாகன், வெண்நீற்றன், புலியின்தோல்-
உடை உடையான், எனை உடையான், “உளோம்; போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி