திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்; காபாலி;
செம்பவளத்திரு உருவன்; சேயிழையோடு உடன் ஆகி,
“நம்பி இங்கே இருந்தீரே!” என்று நான் கேட்டலுமே,
உம்பர் தனித்துணை எனக்கு, “உளோம்; போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி