திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

செய் வினை ஒன்று அறியாதேன்; “திருவடியே சரண்” என்று
பொய் அடியேன் பிழைத்திடினும், பொறுத்திட நீ வேண்டாவோ?
“பை அரவா! இங்கு இருந்தாயோ?” என்ன, பரிந்து என்னை
உய்ய அருள் செய்ய வல்லான், “உளோம், போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி