பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான், பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை, நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.