விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல்
அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல்
உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி
செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள்
தீரும், உடனே.