காலின் நல பைங்கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு
காமுறவினார்
மாலும் மலரானும், அறியாமை எரி ஆகி, உயர் மாகறல்
உளான்-
நாலும் எரி, தோலும் உரி, மா மணிய நாகமொடு கூடி உடன்
ஆய்,
ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா,
வினைகளே.