கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி
காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு
சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான்
அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள்
ஒல்கும், உடனே.