திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

இங்கு கதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தி, எழில்
மெய்யுள் உடனே,
மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி, மகிழ் மாகறல்
உளான்-
கொங்கு, வளர் கொன்றை, குளிர்திங்கள், அணி
செஞ்சடையினான்-அடியையே
நுங்கள் வினை தீர, மிக ஏத்தி, வழிபாடு நுகரா, எழுமினே!

பொருள்

குரலிசை
காணொளி