மன்னும் மறையோர்களொடு பல்படிம மா தவர்கள் கூடி உடன்
ஆய்
இன்ன வகையால் இனிது இறைஞ்சி, இமையோரில் எழு
மாகறல் உளான்-
மின்னை விரி புன்சடையின் மேல் மலர்கள் கங்கையொடு
திங்கள் எனவே
உன்னுமவர், தொல்வினைகள் ஒல்க, உயர் வான் உலகம் ஏறல்
எளிதே.