தூசு துகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வன, பொன்
மாடமிசையே,
மாசு படு செய்கை மிக, மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்;
“பாசுபத! இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி, அழகு
ஆர்
பூசு பொடி ஈசன்!” என ஏத்த, வினை நிற்றல் இல, போகும்,
உடனே.