துஞ்சு நறு நீலம், இருள் நீங்க, ஒளி தோன்றும் மது வார்
கழனிவாய்,
மஞ்சு மலி பூம்பொழிலில், மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்-
வஞ்ச மதயானை உரி போர்த்து மகிழ்வான், ஒர் மழுவாளன்,
வளரும்
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன்-அடியாரை நலியா,
வினைகளே