பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண் நீற்றாய்! செம்பொனே! மலர் செய் பாதா! சீர் தரு மணியே! மிக்க அம் பொனே! கொழித்து வீழும் அணி அணாமலை உளானே! என் பொனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.