பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே! மாலும் நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்! ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே! வால் உடை விடையாய்!-உன் தன் மலர் அடி மறப்பு இலேனே.