திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: உள்ளத் திருக்குறுந்தொகை

வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை
கொன்றானை; குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

பொருள்

குரலிசை
காணொளி