பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில் கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர், இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல் கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.