திருமகன் முருகன் ; தேவியேல் உமையாள் ;
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் ; மாமனேல் இமவான் ;
மலையுடை யரையர்தம் பாவை
தருமலி வளனாம் ; சிவபுரன் ; தோழன்
தனபதி ; சாட்டியக் குடியார்
இருமுகம் ; கழல்மூன் ; றேழுகைத் தலம்ஏழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே