செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
அத்தனே ! பித்தனே னுடைய
சம்புவே ! அணுவே ! தாணுவே ! சிவனே !
சங்கரா ! சாட்டியக் குடியார்க்
கின்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே