செங்கணா ! போற்றி திசைமுகா போற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந் தருளும
எங்கணா யகனே போற்றி ! ஏ ழிருக்கை
யிறைவனே போற்றியே ! போற்றி !