அனலமே ! புனலே ! அனிலமே ! புவனி
அம்பரா! அம்பரத் தளிக்கும்
கனகமே !வெள்ளிக் குன்றமே ! என்றன்
களைகணே ! களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே ! சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே.