பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர் படரொளி தருதிரு நீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழற்றிருச் சடையுந் திவள மாளிகை சூழ்தரு தில்லையுட் டிருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு கொக்கின்றதே