பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
தேய்ந்து மெய்வெளுத் தகம்வனைந் தரவினை அஞ்சித்தான் இருந்தேயும் காய்ந்து வந்துவந் தென்றனை வலிசெய்து கதிர்நிலா எரிதூவும் ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத் தரன்ஆடல் வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர் மனத்தினை யுடையேற்கே