பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்
அறிவும் மிக்கநன் னாணமும் நிறைமையும் ஆசையும் இங்குள்ள உறவும் பெற்றநற் றாயொடு தந்தையும் உடன்பிறந் தவரோடும் பிரிய விட்டுனை யடைந்தனன் என்றுகொள் பெரும்பற்றப் புலியூரின் மறைகள் நான்குங்கொண் டந்தணர் ஏத்தநன் மாநட மகிழ்வானே.