பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே; வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே!