பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா எறிக்கும் சென்னி உடையனார்; உடை தலையில் உண்பதும், பிச்சை ஏற்று; கடி கொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே அடி கழல் ஆர்க்க நின்று (வ்) அனல்-எரி ஆடும் ஆறே!