பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முதல்-தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி, மதக்களிற்று உரிவை போர்த்த, மைந்தரைக் காணல் ஆகும்; மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே கதத்தது ஓர் அரவம் ஆடக் கனல்-எரி ஆடும் ஆறே!