திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: இலிங்க புராணத் திருக்குறுந்தொகை

வெந்த நீறு விளங்க அணிந்திலர்;
கந்தமாமலர் இண்டை புனைந்திலர்;
எந்தை, ஏறு உகந்து ஏறு எரிவண்ணனை,
அந்தம் காணல் உற்றார்-அங்கு இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி