திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும்
மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி,
வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி,
வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.

பொருள்

குரலிசை
காணொளி