திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத
விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது
கயிலாயமலையே.

பொருள்

குரலிசை
காணொளி