குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ, விடம் கிளர் படம்
கொள் அரவம்
மடங்கு ஒளி படர்ந்திட, நடம் தரு விடங்கனது இடம்
தண்முகில் போய்த்
தடங்கடல் தொடர்ந்து, உடன் நுடங்குவ இடம் கொள
மிடைந்த குரலால்,
கடுங் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு
கயிலாயமலையே.