அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை,
துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர்
இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு
உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத
கயிலாயமலையே.