திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

புற்று அரவு பற்றிய கை, நெற்றியது மற்று ஒரு கண், ஒற்றை
விடையன்,
செற்றது எயில், உற்றது உமை, அற்றவர்கள் நல்-துணைவன்,
உற்ற நகர்தான்-
“சுற்றும் மணி பெற்றது ஒளி; செற்றமொடு குற்றம் இலது;
எற்று?” என வினாய்,
கற்றவர்கள் சொல்-தொகையின் முற்றும் ஒளி பெற்ற
கயிலாயமலையே.

பொருள்

குரலிசை
காணொளி