பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை
உடையன்,
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு
இல் நகர்தான்-
பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை
அதனால்,
கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு
கயிலாயமலையே.