திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை
கொங்குமலர் தூய்,
“எங்கள் வினை, சங்கை அவை, இங்கு அகல!” அங்கம்
மொழி எங்கும் உள ஆய்,
திங்கள் இருள் நொங்க, ஒளி விங்கி, மிளிர் தொங்கலொடு
தங்க, அயலே
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு
கயிலாயமலையே.

பொருள்

குரலிசை
காணொளி