சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி,
உடனே-
நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று
பணிகின்ற நகர்தான்-
துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு
சென்று கமழ,
கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற
கயிலாயமலையே.