திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு நின்று எழுந்து அருளி மற்று அவருடன் அம் பொன்மா மலை வல்லி
பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங் குரு வேந்தர்
செங் கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி