திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம்
இடம் எங்கும் அந்தணர்கள் ஓது கிடை ஆக நிலை
மடம் எங்கும் தொண்டர் குழாம்; மனை எங்கும் புனைவதுவை
நடம் எங்கும்; ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து.

பொருள்

குரலிசை
காணொளி